• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 - 2016 நடுத்தவணைகால வரவு செலவுத்திட்டக் கட்டமைப்பும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும்
- அதிமேதகைய சனாதிபதி நிதி, திட்டமிடல் அமைச்சராக 2014 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தல் தொடர்பிலான அடிப்படை பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பற்றி அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கமானது நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் உயர் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட நாடாக தனிநபர் வருமானம் 4000 அமெரிக்கன் டொலர்களையும் விஞ்சுவதாகுமென அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தெரிவிக்கப்பட்டது. இந்த குறியிலக்குகளை அடைவதற்கு சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் போன்ற துறைகள் உள்ளடக்கியதாக கிராமிய, பிரதேச மற்றும் நகர மட்டத்தில் ஏற்கனவே பல கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கருத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கின்ற நலன்கள் பொது மக்களுக்கு துரிதமாகக் கிடைக்கும் பொருட்டு அவை திட்டமிட்டு குறித்துரைக்கப்பட்ட காலப் பகுதிக்குள் முடிவுறுத்துவது தொடர்பிலும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.