• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரி - பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கட்டடத் தொகுதியை ஹோமாகமவில் நிருமாணித்தல்
- ஏற்கனவே சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன் தொகை மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள ஹோமாகம பல்கலைக்கழகக் கட்டடத்தொகுதியை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேற்போந்த நிருமாணிப்பு ஒப்பந்தத்தை கிடைக்கப் பெற்றுள்ள ஆகக் குறைந்த கேள்விக்கு வழங்குவதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.