• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மனையிடத்தை நவீன மயப்படுத்துதல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தின் முன்னுரிமைக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது தெற்காசியாவின் பழைமைவாய்ந்த ஒலிபரப்புச் சேவையாக 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இதன் புராதன பெறுமதிகளை பாதுகாத்து, நவீனமயப்படுத்துவது இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் கட்டடக்கலை சார்ந்த உசாத்துணை சேவையை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் ஊடகத்துறை, தகவல் அமைச்சர் மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.