• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி வீதியையும் ஆர் ஏ த மெல் மாவத்தையையும் நவீனமயப்படுத்துதல் - ஒப்பந்தப் பொதி - ஏ (கலதாரி சுற்றுவட்டத்திலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரை)
- கொழும்பு நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மீள் நிருமாணிப்பு, அபிவிருத்திக்குமான சருவதேசக் கடன் உதவி வழங்கும் உலக வங்கியின் கருத்திட்டமொன்றாக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் ஒருகட்டமாக காலி வீதியின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை புனரமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைக்கும் கேள்விதாரருக்கு வழங்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.