• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நிலையமொன்றை உருவாக்குதல்
- தற்பொழுது போதைப்பொருள் உபயோகம் சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் செல்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஆற்றலுள்ள இளைஞர்களை நோயாளிகளாக மாற்றும் பொறிமுறையாகவும் உள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாவதன் காரணத்தினால் 2011 ஆம் ஆண்டடில் சிறைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,568 பேர்களாவர். இதில் 6,165 பேர்கள் இந்த தவறுக்காக இரண்டாவது தடவையாகவும் சிறைப்படுத்தப்பட்டவர்கள் என்பதுடன் 2,073 பேர்கள் இரண்டு தடவைக்கும் மேலதிகமாக இந்தத் தவறுக்காக சிறைப்படுத்தப்பட்டவர்களாவர். இந்த அளவுகளை நூற்றுவீதமாகக் கணிக்கும்போது 78 சதவீதமாகும். எல்ரீரீ இயக்கத்துடன் இணைந்திருந்த ஆயுதம் தரித்த முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து, சமூகமயப்படுத்திய அனுபவமிக்கப் பதவியினரைக் கொண்டுள்ள புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் அதிபதி பணியகத்திற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் கூட்டிணைந்து போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வளிக்கும் திறன் உள்ளது. புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் அதிபதி பணியகத்தின் கீழ் புனர்வாழ்வளிப்பு நிலையமொன்றை தாபிப்பதற்காக புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.