• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 உலக இருப்பிட தினத்தைக் கொண்டாடுதல் - 2013 ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி
- இந்த ஆண்டின் உலக இருப்பிட தினம் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ளது. உலக இருப்பிட தினத்தை முன்னிட்டு செப்ரெம்பர் மாதம் 30 திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 06 ஆம் திகதி வரை இருப்பிட வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொறட்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் லக்சிரிகம கிராமத்தை அபிவிருத்தி செய்தல் உட்பட இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.