• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாரெஸ் குடியரசுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மீது பிரேரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை
- இந்த உடன்படிக்கையின் நோக்கமானது இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காகும். எதிர்வரும் தினங்களில் இலங்கையின் அதிமேதகைய சனாதிபதியினால் பெலாரெஸ் குடியரசுக்கு மேற்கொள்ளவுள்ள இராஜங்க விஜயத்தின் போது மேற்போந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.