• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டைசென்டியாமைன்ட் மற்றும் வேபுரொட்டின் கலவைகள் மூலம் மாசடைந்த பால்மா வகைகள்
- இந்த விடயத்திற்கு உரித்தாக கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறுபட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுற்றாடல் அமைச்சினால் வேபுரொட்டின் கலவைகள் அடங்கிய இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களை விநியோகிப்பதை நிறுத்துவதற்கு உடன்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. ஆதலால், சிறுவர் பால் ................. உட்பட பால்மாக்கள் போதுமான அளவு சந்தையிலிருப்பதும், உள்நாட்டுப் பால் உற்பத்தி, உருவாக்கலையும் விற்பனையையும் மேம்படுத்துதல் மற்றும் தேசிய போசணைத் தேவைப்பாடுகளை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் அது தொடர்பிலான அறிக்கையொன்றைப் பரிசீலனை செய்வதற்கு சமர்ப்பிக்கும் பொருட்டு உரிய சிரேட்ட அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.