• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தன்ஸானியாவிற்கான இராஜாங்க விஜயம் மற்றும் தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற 2013 பூகோல ஸ்மாட் கூட்டுக் கலந்துரையாடல் - 2013 யூன் 27-29 - செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் / புரிந்துணர்வு உடன்படிக்கை களுக்குமான தழுவு அங்கீகாரம்
- ஆபிரிக்க நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கக் கொள்கைக்கமைய தன்ஸானியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டதுடன் அப்போது தாருஸ்ஸலாம் நகரில் இடம்பெற்ற 2013 பூகோல ஸ்மாட் கூட்டுக் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார். ஆபிரிக்க நாடுகளுடன் நிலவுகின்ற இலங்கையின் பொருளாதார உறவுகள் சந்தை மற்றும் முதலீட்டுத் துறைகளையும் தாண்டி அறிவுப்பரிமாற்றம் திறன் அபிவிருத்தி மற்றும் தொழினுட்பப் பரிமாற்றம் போன்ற துறைகளை நோக்கியும் விரிவடைந்துள்ளது. இரண்டு நாடுகளினதும் தலைநகரங்களில் வதிவிட இராஜதந்திர தூதரகங்களை தாபிப்பது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் தமது உச்ச எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். சுற்றுலாத்துறை, பொருளாதார மற்றும் தொழினுட்பத்துறையின் ஒத்துழைப்பு மற்றும் கலாசார துறையின் ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களும் அவரவர் முன்னிலையில் கைச்சாத்திட்டனர். வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் மேற்போந்த தகவல்களை சமர்ப்பித்ததுடன் இதில் ஒப்பமிடப்பட்ட உடன்படிக்கைகளுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.