• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்கு மூலதனத்தை அதிகரிப்பதற்காக 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
- கடந்த சில வருடங்களாக மக்கள் வங்கி இந்த வலையத்தில் தனது வியாபாரச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் தனது கிளைவலையமைப்பை நாடுபூராவும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் வங்கியின் பங்குகள் மூலதன வளர்ச்சியின் பொருட்டு தேவையான திருத்தங்களை சட்டமூலமாக்குமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிதேகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.