• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
- மேற்போந்த சட்டத்துக்கு ஏற்புடைத்தான திருத்தத்தை சட்டமூலமாக்குமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிதேகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரேரிக்கப்பட்ட திருத்தத்தில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தினத்திலிருந்து நான்கு (04) வருட காலப் பகுதிக்குள் ஆயுள் காப்புறுதி நோக்கத்திற்கு ஒரு கம்பனியும் பொதுவான காப்புறுதி நோக்கத்திற்கு வேறு கம்பனியுமாக தனது காப்புறுதி கம்பனிகளை இரண்டாக நியமிப்பதற்கு இலங்கைக் காப்புறுதி சபையினால் வழங்கப்படுகின்ற செல்லுபடி உத்தரவுச் சீட்டின் மீது நீண்டகால காப்புறுதித் திட்டத்திலும் பொதுவான காப்புறுதித் திட்டத்திலும் ஈடுபடும் காப்புறுதியாளர்களுக்கு பணிப்பு விடுப்பது விசேட தன்மைகளாகும்.