• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகமு புரவர - 2013 தொடர்மாடி வீடுகளின் நவீனமயப்படுத்தல்
- நகமு புரவர - 2013 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொடர்மாடி வீட்டுத்தொகுதிகளை புதுப்பிக்கும் பொருட்டு பொது திறைசேரியினால் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு 1000 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 25 வீடமைப்புத் திட்டங்களை புதுப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. வீடமைப்புத் திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபா வரை மதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 17 வீடமைப்புத் திட்டங்களின் திருத்த வேலைகளுக்கு ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதியத்தை உபயோகப்படுத்தி அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு நிருமாண பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.