• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்
- அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படக் கூடிய தொழில்முயற்சிகளை அறிந்துகொள்ளும் பொருட்டு இலங்கை துறைமுக அதிகார சபையினால் தொழில்முயற்சித் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது . அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் பின்வரும் தொழில்முயற்சிகளை இயைபுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட பின்வரும் கேள்விதாரர்களுக்கு வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* வரையறுக்கப்பட்ட Advance Surfactants Indin Ltd. - பெற்றோலியம், பெற்றோலிய இரசாயன மற்றும் இரசாயன பொருட்களின் உற்பத்திக்கு பொறித்தொகுதியொன்றைத் தாபிக்கும் பொருட்டு காணியொன்றை குத்தகைக்கு வழங்குதல்;

* லாப் எரிபொருள் பீ.எல்.சீ - எல்.பீ. எரிபொருளை களஞ்சியப்படுத்து வதற்கும் விநியோகிப்பதற்குமான இடமொன்றைத் தாபிப்பதற்கு காணியொன்றை குத்தகைக்கு வழங்குதல்;

* வரையறுக்கப்பட்ட Laugfs Holdings Ltd. ................... ஆண்டொன்றுக்கு 50,000 மெற்றிக் தொன் ஆற்றலைக் கொண்ட உராய்வு நீக்கியை கலப்பதற்கான பொறித்தொகுதியொன்றை தாபிப்பதற்குக் காணியொன்றை குத்தகைக்கு வழங்குதல்;

* வரையறுக்கப்பட்ட Energy World International Ltd. ................. இயற்கைப் பொருட்களைக் கொண்ட எரிபொருள் மைய இறங்குதுறையை நிருமாணிப்பதற்கு காணியொன்றை குத்தகைக்கு வழங்குதல்; அத்துடன்

* வரையறுக்கப்பட்ட Rank Container Terminal Ltd. .............. பெற்றோ இரசாயனப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கும் மீள் இறக்குமதி வசதிகளை தாபிப்பதற்கு காணியொன்றை குத்தகைக்கு வழங்குதல்.