• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - 2 ஆம் கட்டத் தின் கீழ் ஆறு (6) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தேசிய நெடுஞ்சாலைகளைப் புனரமைப்பதற்கும் / விஸ்தர்ப்பதற்கும் / மேம்படுத்துவதற்கும் பின்வரும் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* ஹசலக்க - ஹந்துன்கமுவ - ஹெட்டிபொல வீதி (B 484) - 0.00 கிலோ மீற்றரிலிருந்து 20.00 கிலோ மீற்றர் வரை;

* களனிமுல்ல - முல்லேரியாவ - கொஸ்வத்த வீதி - கட்டம் I - தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் வீதியையும் செல்லும் பாதையையும் நிருமாணித்தல் - 0.00 கிலோ மீற்றரிலிருந்து 0.60 கிலோ மீற்றர் வரை;

* குருநாகல் - நாரம்மல - மாதம்பை வீதி - 22.26 கிலோ மீற்றரிலிருந்து 40.87 கிலோ மீற்றர் வரை;

* சீதுவ - கட்டுநாயக்க வீதியின் 0.00 கிலோ மீற்றரிலிருந்து 3.90 கிலோ மீற்றர் வரையிலான பகுதியும் சீதுவையிலிருந்து உடுகம்பொல வரையிலான 0.00 கிலோ மீற்றரிலிருந்து 11.70 கிலோ மீற்றர் வரை;

* யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதி - 28.5 கிலோ மீற்றரிலிருந்து 31.5 கிலோ மீற்றர் வரைக்கும் இடைப்பட்ட 1.5 கிலோ மீற்றர் வீதிப்பகுதி; அத்துடன்

* அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக அபிவிருத்தி கருத்திட்டம் சார்ந்த வீதி வலையமைப்பு.