• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்கு பகுதியை நிருமாணித்தல் - தெற்கு கடுகதி வீதி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல்
- பின்னதூவயிலிருந்து மாத்தறை வரையிலான தெற்கு கடுகதி பாதையின் தெற்குப் பகுதியை நிருமாணிப்பதற்குத் தேவையான செலவினை ஈடுசெய்யும் பொருட்டு அரசாங்கம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொண்டுள்ளது. தெற்கு கடுகதி வீதி நோக்கிச் செல்லும் இங்கு கீழ் குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைப்பதற்கு மேற்போந்த கடன் தொகையின் மீதியை பயன்படுத்துவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சானாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* B 465 - வெலிகம - கனன்கே வீதி - 9.6 கி.மீ

* B 466 - வெலிகம - தெலிஜ்ஜவில வீதி - 7.7 கி.மீ

* B 578 - தொரப்பே - ஹியாரே வீதி - 8.7 கி.மீ