• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டில் சிறந்த வாயுத்தரம் தொடர்பிலான மாநாடு" (BAQ), அத்துடன் "8 ஆவது ஆசிய வலய சுற்றாடல் நிலைபேறுடைய போக்குவரத்து அவை" (EST) ஆகிய சர்வதேச மாநாடுகளை இலங்கையில் நடாத்துதல்
- ஆசிய வலயத்தின் வாயுத்தர முகாமைத்துவ துறைசார்ந்த நிபுணர்கள் பாரியஅளவில் கூடி அரசாங்க கொள்கை மற்றும் செயற்பாடுகள் பற்றி விசேட கவனம் செலுத்தி நிலைபேறுடைய போக்குவரத்து, சக்தி, கைத்தொழில், தூய எரிபொருள், வினைத்திறமை மிக்க வாகனங்கள், வாயுத்தரம், காலநிலை மாற்றங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கான களமொன்று இந்த மாநாட்டின் மூலம் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றது. இவற்றுக்கு மேலதிகமாக மேற்போந்த மாநாட்டிற்கு ஒருங்கிணைவாக 2014 செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து ஒக்றோபர் மாதம் 03 ஆம் திகதிவரை ஆசிய வலய சுற்றாடல் நிலைபேறுடைய போக்குவரத்து அவையின் 08 ஆவது மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என இந்த அவை ஏற்பாட்டாளர்களினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.