• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் அடுத்த தலைமுறை வலையமைப்புக்கான (Next Generation Networks) கொள்கையும் ஒழுங்குறுத்துகை கட்டமைப்பும்
- இலங்கையின் அடுத்த தலைமுறை வலையமைப்பு ஒலி, ஔி மற்றும் மின்னஞ்சல் அடங்கலாக சகல விதமான சேவைகளுக்கும் பொதுவான அணுகுமுறையொன்றைக் கொண்டுள்ளது. இந்த புதிய வலையமைப்பு அளவு முறையின் ஊடாக வலையமைப்பு நுழைவொன்றை மாத்திரம் பேணுவதற்கும் பலதரப்பட்ட தரவுகள் ஒருமுகப்படுத்தப்பட்ட புதிய சேவையை வழங்குவதற்கும் முடிந்தமை தொலைபேசிகளை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதி சேமிக்கும் வாய்பினை உருவாக்கியுள்ளது. சம்பிரதாய வலையமைப்புடன் ஒப்பிடும் போது, அடுத்த தலைமுறை வலைமைப்பு முறையானது நவீன சேவைகைளை வழங்குவதற்கு உதவும் பௌதீக ரீதியில் விருத்தி செய்யவேண்டிய தேவை இல்லாமையினால், இந்த புதிய வலையமைப்புத் திட்டம் பல்பணி நோக்கத்தைக் கொண்டதாகும். இலங்கையின் அடுத்த தலைமுறை வலையமைப்புக்கான கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.