• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைகழக மாணவர்களுக்கான 60 விடுதிகளை நிருமாணிக்கும் துரித கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- நாட்டில் இரண்டு பௌத்த பல்கலைக்கழகங்கள் உட்டபட 17 பல்கலைக்கழங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, சுமார் 92,000 மாணவர்கள் அவற்றில் கல்வி கற்கின்றார்கள். இந்த பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்பாடு செய்யும் தேவை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இரண்டு (02) வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்புடன் இரண்டு கட்டங்களில் 17 பல்கலைக்கழங்களையும் தழுவும் விதத்தில் நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக 60 கட்டடங்களை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது . இந்த ஒவ்வொரு கட்டடத்திலும் 200 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடியவாறு நான்கு (04) மாடிகளில் 100 அறைகளைக் கொண்டிருப்பதுடன், இந்தக் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டவிடத்து 12,000 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் நன்மை அடைவர். இந்த கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளுக்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.