• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர் வலய நகர நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம் - இலங்கை - ADB LOAN : L 2477 SRI (SF) புத்தளம் நீர் வழங்கல் திட்டத்தின் அனுப்பீட்டு பிரதான குழாய் பாதை மற்றும் விநியோக முறைமை சார்பில் HDPE, DI, PVC குழாய்கள், உதிரிப்பாகங்கள், வால்வுகள் வழங்குதலும் பதித்தலும் - ஒப்பந்த இலக்கம் : PIPES/P/09
- தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் தேவையான நிதி வழங்கப்படும். மேற்போந்த விடயங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.