• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை சுற்றுவட்ட வீதிக் கருத்திட்டம் - மக்கள் சீன குடியரச்சின் HUNAN ROAD & BRIDGE CONSTRUCTION GROUP CORPORATION நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக அங்கீகாரம் கோரல்
- கிழக்கு மாகாணத்தில் பிரதான நகரமொன்றாக அபிவிருத்தி செய்வதற்காக திருகோணமலை நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பல திசைகளிலிருந்தும் திருகோணமலை நகரத்திற்கு முறையான நுழைவினை வழங்குவதற்காக நகரத்திற்குள் செல்லும் சுற்றுவட்ட வீதியினை நிருமாணிப்பது அத்தியாவசியமானதென கருதப்படுகின்றது. அமைச்சர வையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டிற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் கருத்திட்டத்தின் தொடக்க வேலைகளை ஆரம்பிப்பதற்கும் மீதி நிதி ஏற்பாடுகளை 2014 - 2016 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.