• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி, திட்டமிடல் அமைச்சுக்காக கூட்டு திறைசேரி முகாமைத்துவ தகவல் (ITMIS) வகைமுறையை நடைமுறைப்படுத்துதல்
- ITMIS தகவல் வகைமுறை மூலம் பொது திறைசேரியினதும் / நிதி, திட்டமிடல் அமைச்சினதும் பிரதான திணைக்களங்களின் தொழிற்பாடுகளின் தன்னியக்க முறையாக்கத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, இறைவரி நிருவாகத்தையும் கூட்டுத் திறைசேரி தொழிற்பாட்டையும் முறையாகவும் பயனுள்ள வகையிலும் முகாமிக்கப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் பொது திறைசேரியின் பணிகளின் தன்னியக்க முறையாக்கம் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். திறைசேரி தொழிற்பாட்டு தன்னியக்க முறையாக்கத்திற்காக கூட்டு மென்பொருள் வகைமுறையொன்றின் கொள்வனவினை குறியிலக்காகக் கொண்டு நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு ITMIS தகவல் வகைமுறை உதவும். இயைபுள்ள நோக்கத்திற்குத் தேவையான மென்பொருள் வகைமுறைக்கு ஏற்புடைத்தான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.