• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பம்பலப்பிட்டி தொடக்கம் நகர எல்லை வரையான காலி வீதியையும் ஆர்.ஏ. த மெல் மாவத்தையையும் நவீனமயப்படுத்தல்
- புனரமைப்பிற்கும் அபிவிருத்திக்குமான சருவதேச வங்கியினால் IBRD நிதியளிக்கப்படும் உலக வங்கிக் கருத்திட்டமொன்றானான கொழும்பு நகர அபிவிருத்திக் கருத்திட்டம் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. IBRD வங்கியினால் வழங்கப்பட்ட கடன்தொகை கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் பலவித அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதி பம்பலபிட்டியவிலிருந்து நகர எல்லைவரை காலி வீதியையும் ஆர்.ஏ. த மெல் மாவத்தையையும் புனரமைப்பதற்கு பயன்படுத்தப்படும். மேற்போந்த ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.