• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“பிலிசரு” திண்மக்கழிவு முகாமைத்துவ தேசிய கருத்திட்டம்
- இயைபுள்ள உள்ளூராட்சி அதிகார பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை முறையாக முகாமிக்கும் பொருட்டு நாளொன்றுக்கு 10 தொடக்கம் 50 மெற்றிக் தொன்னுக்கு இடைப்பட்ட கொள்ளளவைக் கொண்ட ஐந்து பிரதான சேதனப் பசளைக் கருத்திட்டங்கள் “பிலிசரு” கருத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கொரிய அரசாங்கத்தின் நன்கொடையாக கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகப் பிரிவில் சுகாதாரப் பாதுகாப்பு மிக்க கழிவு அகற்றல் இடமொன்று தற்போது தாபிக்கப்பட்டு வருகின்றது. இயைபுள்ள நோக்கத்திற்காக மேலதிக நிதிகளை பெற்றுக் கொள்வதற்கும் கருத்திட்டக் காலத்தை 2014 சனவரி மாதத்திலிருந்து 2018 திசெம்பர் வரை நீடிப்பதற்கும் சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.