• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நுண்பாக நிதி நிறுவனங்களின் ஒழுங்குறுத்துகைக்கும் மேற்பார்வைக்குமான வழிமுறை
- பொது மக்களின் வைப்புக்களை பொறுப்பேற்கும் நுண்பாக நிதி நிறுவனங்களுக்கு பிரேரிக்கப்பட்டுள்ள ஒழுங்குறுத்துகை மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பு ஏற்புடையதாவதோடு, அது பின்வரும் மூன்று படிநிலைகளைக் கொண்டிருக்கும் :

* படிநிலை I - பெரிய நுண்பாக நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் நேரடி மேற்பார்வைக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படும்;

* படிநிலை II - சிறிய நுண்பாக நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற கணக்காய்வுக் கம்பனிகளின் மேற்பார்வைக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படும்;

* படிநிலை III - கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரும், திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம், திவிநெகும சமூக நிதி வங்கி, திவிநெகும சமூக நிதி வங்கிச் சங்க முகாமைத்துவச் சபை, கமநல அபிவிருத்தி ஆணையாளர் அதிபதி போன்ற அதிகாரிகளின் கீழ் உள்ள நுண்பாக நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குறுத்துகையிலிருந்து விலக்களிக்கப்படுவதோடு, இயைபுள்ள நியதிச் சட்டங்கள் மூலம் ஏற்கனவே வலுவிலுள்ளவாறு இயைபுள்ள அதிகார பீடங்களினால் இவற்றின் ஒழுங்குறுத்துகையும் மேற்பார்வையும் செய்யப்படும்

* பிரேரிக்கப்பட்டுள்ள சட்டம் வலுவாக்கம் செய்யப்பட்டதன் பின்னர் உத்தரவு பெற்ற நுண்பாக நிதி நிறுவனங்களும் சட்டத்தின் ஏற்பாடுகளின் மூலம் விலக்களிக்கப்பட்டுள்ள ஆள் ஒருவர் தவிர வேறு எவருக்கும் நுண்பாக நிதி வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது;

* 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் உத்தரவு பெற்ற வங்கிகளும் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் உத்தரவு பெற்ற நிதிக் கம்பனிகளும் இலங்கை மத்திய வங்கியினால் விதித்துரைக்கப்படுகின்றவாறு சமூக நோக்கங்களுக்காகத் தாபிக்கப்பட்டுள்ள நுண்பாக நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சமூக நிதி அமைப்புகளும் பிரேரிக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஏற்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது; அத்துடன்

* 1972 ஆம் ஆண்டின் கூட்டுறவுத்துறைச் சட்டம் மற்றும் மாகாண சபை நியதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களும் 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களும் 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களும் பிரேரிக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஏற்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இயைபுள்ள சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது