• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 "தெயட்ட கிருள" தேசிய கண்காட்சியும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும்
- இந்த நிழ்ச்சித்திட்டம் குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களைத் தழுவி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, 2014 – சுதந்திரதின விழாவுக்கு ஒருங்கிணைவாக குளியாப்பிட்டிய வயம்ப பல்கலைக்கழகம், தொழினுட்பக் கல்லூரி, மத்திய மகா வித்தியாலயம் ஆகிய மனையிடங்களில் இந்த தேசியக் கண்காட்சி நடாத்தப்படவுள்ளது. பின்வரும் நோக்கங்களை அடையும் பொருட்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். :

* குடும்பம், கிராமம் மற்றும் பிரதேச மட்டத்தில் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதைக் குறியிலக்காகக் கொண்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ;

* மக்கள் தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறுகிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படக்கூடிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் ;

* பிரதேசத்தில் நிலவும் பலவித நிருவாகப் பிரச்சினைகளையும் மக்கள் குறைபாடுகளையும் அரசாங்க உத்தியோகத்தர்களினால் தீர்த்துவைத்தல்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது