• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
- 2017 பிரதான தேசிய வீதி திட்டத்தில் வடக்கு கடுகதி வீதிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இனங் காணப்பட்டுள்ளது. இந்த கடுகதி வீதிக் கருத்திட்டத்தின் கட்டம் I, பின்வருமாறு நான்கு படிமுறைகளைக் கொண்டதாகும் :

* கட்டம் I - எண்டேரமுல்லையிலிருந்து மீரிகம ஊடாக அம்பேபுஸ்ச - 53 கிலோ மீற்றர்;
* கட்டம் II - மீரிகமவிலிருந்து பல்லன்தெனிய (குருநாகல்) - 39 கிலோ மீற்றர் ;
* கட்டம் III - அம்பேபுஸ்சவிலிருந்து கண்டி - 46 கிலோ மீற்றர்; அத்துடன்
* கட்டம் IV - பல்லன்தெனியவிலிருந்து தம்புள்ளை - 62 கிலோ மீற்றர் ;

China Merchants Holdings (International) Company Limited மற்றும் China Merchants Huajian Highway Investment Company Limited கம்பனிகளினால் இந்தக் கருத்திட்டத்திற்கு முழுமையாக நிதியிடப்படவுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தினதும் II ஆம் கட்டத்தினதும் வடிவமைப்பு, நிருமாணிப்பு, நிதியிடல், கையாளுகை ஆகியன தொடர்பிலான கருத்திட்டப் பிரேரிப்புகளை மதிப்பிடும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவொன்றையும் கருத்திட்டக் குழுவொன்றையும் நியமிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.