• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் கட்டளை அடிப்படையில் கிராமிய பிரதேசங்களுக்கு 81 சிறிய வசுவண்டிகளை கொள்வனவு செய்தல்
- 2013‑01‑17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் கிராமிய பிரதேசங்களில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சினால் ஏற்கனவே 33 ஆசனங்களைக் கொண்ட 200 வசுவண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீது மேற்போந்த கேள்வியை M/s Lanka Ashok Leyland PLC கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.