• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் - மேலதிக நிதியத்தின் கீழ் கட்டம் I இன் ஐந்து (05) ஒப்பந்த பொதிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
- வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தின் கீழ் சுமார் 120 கிலோ மீற்றர்களைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கை அரசாங்கத்திற்கு 98 மில்லியன் யுஎஸ் டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைத்து மேம்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* வவுனியா - ஹொரவப்பொத்தான வீதி (A 29) - 24.00 கிலோ மீற்றரிலிருந்து 34.95 கிலோ மீற்றர் வரை;

* மதவாச்சி - கெபித்திகொல்லாவ வீதி (B 283) - 0 கிலோ மீற்றரிலிருந்து 12.6 கிலோ மீற்றர் வரை;

* மதவாச்சி - கெபித்திகொல்லாவ வீதி (B 283) - 12.6 கிலோ மீற்றரிலிருந்து 25.4 கிலோ மீற்றர் வரை;

* கெபித்திகொல்லாவ - பதவிய வீதி (B 211) - 0 கிலோ மீற்றரிலிருந்து 15.5 கிலோ மீற்றர் வரை; அத்துடன்

* கெபித்திகொல்லாவ - பதவிய வீதி (B 211) - 15.5 கிலோ மீற்றரிலிருந்து 31.345 கிலோ மீற்றர் வரை.