• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கேகாலை நகர அபிவிருத்தி திட்டம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை மீளமைத்தலும் மத்திய பஸ்தரிப்பிட அபிவிருத்திக் கருத்திட்டமும்
- கேகாலை நகரத்தில் தற்போதுள்ள பஸ்தரிப்பிடங்கள் மூன்று இடங்களில் அமைந்துள்ளமையினால் நகரத்தில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றது. பரகம்மன பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள காணித் துண்டுக்குத் தற்போதைய பஸ் டிப்போவை கொண்டு செல்வதற்கும், கேகாலை நகரத்தில் பொது மக்களுக்குக் கூடிய வசதிகளை வழங்கும் பொருட்டு பிரேரிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பிடத்தை தற்பொழுது பஸ்டிப்போ அமைந்திருக்கும் காணியில் நிருமாணிப்பதற்கும் இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதியங்கள் 2013 இலிருந்து 2016 வரை குறித்தொதுக்கிக் கொள்வதற்கும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.