• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இயற்கையாக இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கான சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தையும் குழுக்கூட்டங்களையும் இலங்கையில் நடாத்துதல்
- காம்போஜியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, பப்புவாநியுகினி, பிலிப்பைன், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் இயற்கை இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கான சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றதோடு , உலக இயற்கை இறப்பர் உற்பத்தியின் சுமார் 92 சதவீதம் இந்த சங்கத்தின் உறுப்பாண்மை நாடுகளினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சங்கத்தின் பொதுக் கூட்டமும் அதன் குழுக்கூட்டங்களும் வருடாந்த இறப்பர் மாநாடு 2013 ஒக்ரோபர் மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கும் அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளைச் செய்வதற்கும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.