• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2010 மணிலா சருவதேச சமவாயத்தின் மீது பயிற்சியளித்தல், சான்றிதழ் வழங்குதல், கவனிப்பு பணிகள் ஆகியவற்றுக்கான புதிய ஒழுங்குவிதிகளை செயல்வலுவாக்கம் செய்தல்
- கடலோடிகள் சார்பில் பயிற்சியளித்தல், சான்றிதழ் வழங்குதல், கவனிப்பு பணிகள் என்பன சருவதேச சமவாயத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்போந்த சமவாயம் 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளமையினால் இந்த திருத்தங்களுக்கு அமைவாக 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வர்த்தக கப்பற் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இந்த ஒழுங்குவிதிகளை 2013‑07‑01 ஆம் திகதியிலிருந்து வலுவாக்கம் செய்வதற்கும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.