• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02, ஹைட்பார்க் கோனரிலுள்ள காணியை அலுவலக கட்டடத் தொகுதி மற்றும் பதவியினர் பயிற்சி நிலையம் ஆகியவற்றை நிருமாணிப்பதற்காக மக்கள் வங்கியின் துணைக் கம்பனியொன்றாகிய People's Property Development Company Ltd கம்பனிக்கு குறித்தொதுக்குதல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான மேற்போந்த காணித் துண்டை அதன் பதவியினர்களின் பயிற்சி நிலையத்திற்காகவும் People's Property Development Company Ltd கம்பனியின் அலுவலகத்திற்காகவும் வசதியளிக்கப்படும் பல்மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பொது திறைசேரியினால் விதித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, People's Property Development Company Ltd கம்பனிக்கு குத்தகைக்களிப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.