2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2013 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள் - வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியங்களை பகிர்ந்தளிப்பது சம்பந்தமாகவும் இதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஏனைய நிருவாக செயற்பாடுகள் தொடர்பிலுமான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசகளை செயல்வலுப்படுத்துவதற்கும் இந்த சிபாரிசுகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |