• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2012 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2012 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறப்புகள் சில இங்கு கீழே காட்டப்பட்டுள்ளன :

திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டம் - இந்த நிகழ்ச்சித் திட்டம் கமத்தொழில், கால்நடைவளர்ப்பு, கடற்றொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி போன்ற துறைகளை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப் படுகின்றதோடு, 2012 ஆம் ஆண்டில் மொத்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 2,912.98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

* கமத்தொழில் துறை - விதை மற்றும் நாற்றுகளை வழங்குவதற்கு இந்தத் துறைக்கு 2012 ஆம் ஆண்டில் 1,559.81 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

* கால்நடைவளர்ப்புத் துறை - இந்தத் துறைக்கு 2012 ஆம் ஆண்டில் 365 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

* சமூக பாதுகாப்பு - சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் - குறைந்த வருமானங்களைக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 2012 ஆம் ஆண்டில் 1,549,107 குடும்பங்களுக்கு 10,503 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

* கமநெகும மற்றும் புறநெகும - கருத்திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டில் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

* வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு பணிகள் - வட மாகாணத்தின் வீதி அபிவிருத்திக்காக 3,310.93 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் இந்த நோக்கத்திற்காக 1,149.83 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக 717.24 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது..