• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு நான்கு மாடிகளைக் கொண்ட வள நிலையமொன்றையும் கேட்போர் கூடமொன்றையும் நிருமாணித்தல்
- 2014 - 2016 நடுத்தவணைக்கால வரவுசெலவுத் திட்டக் கட்டமைப்பிற்குள் வழங்கப்படுகின்ற நிதியேற்பாடுகளின் மூலம் 271.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவினத்தின் மீது மேற்போந்த கருத்திட்டத்தின் நிருமாணிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி கேள்வி கோரல்களின் மூலம் இதற்குப் பொருத்தமான ஒப்பந்தகாரர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.