• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை வர்த்தக கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II
- இந்தக் கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 103 மரக்கறி விற்பனை நிலையங்களும் 05 மீன் விற்பனை நிலையங்களும் 03 இறைச்சி விற்பனை நிலையங்களும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை நிருமாணிக்கும் பணிகள் முடிவடைந்து வருகின்றன. இந்தக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தம், மதிப்பீட்டிலுள்ள கட்டண அளவுகள் நிருமாண பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் நிலையியல் தொழினுட்பக் குழுவினால் அங்கீகரிக்கப்படுவதற்கு உட்பட்டு, வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு வழங்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.