• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற் பேட்டைகளை புனரமைத்தலும் தரமுயர்த்துதலும் நவீன மயப்படுத்துதலும்
- 18 கைத்தொழில் பேட்டைகளில் உற்பத்திக் கைத்தொழில்களில் ஈடுபடுகின்ற 265 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் உள்ளதுடன் இதன்மூலம் 6,900 பேருக்கு நேரடித் தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த கருத்திட்ட நோக்கங்களில் உள்ளக வீதி வலைப்பின்னலை புதுப்பித்தல், இட பாதுகாப்பு வேலிகளை நிருமாணித்தல், நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டினை மேம்படுத்துதல், உள்ளகப் பாதைகளுக்கு ஔியூட்டுதல், தீயணைப்பு முறைமையையும் ஊழியர் நலனோம்புகை வசதிகளையும் மேம்படுத்துதல் என்பவை உள்ளடக்கப் பட்டுள்ளன. 2013 - 2015 ஆம் ஆண்டுகளில் வழங்கப்படுகின்ற நிதியங்களின் மூலம் 305.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவினத்தின் மீது, இந்த கருத்திட்டத்தின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.