• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயர்ந்தோருக்கான இலங்கையின் தேசிய சுகாதாரக் கொள்கை
- மொத்த புலம்பெயர்வு செயற்பாட்டில் இலங்கை புலம்பெயர்ந்தோர்களின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள இயைபுள்ள சகல பிரிவுகளையும் நிறுவனங்களையும் இதற்காக தொடர்புபடுத்துவது புலம்பெயர்ந்தோருக்கான இலங்கையின் தேசிய சுகாதாரக் கொள்கையின் நோக்கமாகும். நாட்டிலிருந்து வெளியேறும், நாட்டிற்குள் வருகைதரும் மற்றும் உள்நாட்டின் புலம்பெயர்ந்தோரும் இந்நாட்டில் தங்க வைத்து செல்லும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்த கொள்கை மூலம் பரிசீலனைக்குட்படுத்தப்படும் முக்கிய குழுக்கள் என இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் சிறப்புத் தன்மைகள் சில இங்கு கீழே காட்டப்பட்டுள்ளன.

நாட்டைவிட்டு வெளியேறுகின்ற புலம்பெயர்ந்தோர்களும் நாட்டில் தங்க வைத்துச் செல்லும் அவர்களுடைய குடும்பங்களும் :

சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் மனிதவிழுமியங்களை பாதுகாக்கும் சூழலுக்குள் கௌரவ பணிகள் மற்றும் பயனுள்ள தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள சகலரினதும் ஆரோக்கியத்தையும் சமூக நலனோம்பல்களையும் உறுதிப்படுத்துதல் ;

* இலங்கை புலம்பெயர்ந்தோர்களை பணிக்கமர்த்தும் நாடுகளுடன் இருபக்க உடன்படிக்கைகளையும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் செய்து கொள்வதன் மூலம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பணிபுரி வோரின் பாதுகாப்பான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துதல் ; அத்துடன்

பெற்றோர்களில் ஒருவர் மாத்திரமுள்ள குடும்பத்தின் தாயோ அல்லது தந்தையோ தொழிலுக்காக வெளிநாடு செல்லுமிடத்து இந்தக் குடும்பங்களின் நலனோம்பல் தேவைப்பாடுகளை பூரணப்படுத்தும் பொருட்டு ஒழுங்கு முறையான திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துதல் .

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் :

இலகுவில் ஆளாகக்கூடிய உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களின் குறித்துரைக்கப்பட்ட போசணைப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்; அத்துடன்
Br>* தனியார் துறையில் சுகாதார சேவைகள் வழங்குவோர்களை தொடர்புபடுத்திக் கொண்டு உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் நுழைவினை உறுதிப்படுத்துதல்.

நாட்டுக்கு வருகை தரும் புலம்பெயர்ந்தோர் :

புலம்பெயர்வுச் செயற்பாடு புலம்பெயர்ந்தவரின் அல்லது இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தின்பால் பாதிப்பு ஏற்படாதென உறுதிப்படுத்துதல்;

புலம்பெயர்ந்தோர்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய சுகாதார, சமூகசேவைகள் தொடர்பில் நோய்கள் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் குறைத்துக் கொள்ளும் பொருட்டு பொதுச் சுகாதார பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகாணுதல் ; அத்துடன்

மேற்போந்த சுகாதார நியமங்களுடன் கூடிய நாடொன்றாக இலங்கையை மேம்படுத்துதல்.