• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) கீழ் தொகுதி எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவையும் மாவட்ட எல்லை நிர்ணயக் குழுக்களையும் நியமித்தல்
தொகுதி முறையின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு தொகுதி எல்லை நிருணயத்திற்காக மேற்போந்த எல்லை நிருணயக் குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இறுதி அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பதற்கு இயலச் செய்யும் வகையில் மேற்போந்த குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியை மேலும் ஆறு (06) மாத காலம் நீடிப்பதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.