• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி உத்தரவாதங்களின் மூலம் உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்கள்
ஏற்கனவே நாட்டில் குழாய்நீர் வழங்கல் 44 சதவீதத்தை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டாகும்போது அதை 60 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த துறைக்கு உள்நாட்டு வங்கிகளினால் மூலதன முதலீடுகள் செய்யப்படுவதன் மீது உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களை ஈடுபடுத்துவதற்கும் அதன்மூலம் செலவு செய்யப்படுகின்ற மூலதனச் செலவினங்களை குறிப்பிடத்தக்கவளவு குறைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வெளிநாட்டு ஒப்பந்தக் காரர்களுடன் சேர்ந்து கூட்டுக் கம்பனிகளாகவோ அல்லது உப ஒப்பந்தக்காரர்களாகவோ செயலாற்றி உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் கடந்த சில வருடங்களாக இந்தத் துறையில் கணிசமான அனுபவங்களைப் பெற்றுள்ளனர். 29 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்தின் மீது 30 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.