• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தரைப்படை மருத்துவசாலைக்கு 1.5 Tesla MRI SCANNER முறைமையொன்றைக் கொள்வனவு செய்தல்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்குழுவின் சிபாரிசுக்கமைய தரைப்படை உத்தியோகத்தர்களுக்கு மிகச்சிறந்த வசதிகளை வழங்கும் பொருட்டு அண்ணளவாக 19,28,21,590.00 ரூபாவைக் கொண்ட மொத்தச் செலவினத்தின் மீது நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தரைப்படை மருத்துசாலைக்கு MRI SCANNER முறைமையொன்றைக் கொள்வனவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.