• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களினால் எய்தப்பட வேண்டிய அரசகரும மொழித் தேர்ச்சிக்குரியதான விடயங்கள் ஆய்வு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கை
அமைச்சரவைச் செயலாளரின் தலைதை்துவத்தின் கீழ் சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் அரசகருமமொழிக் கொள்கைக்கமைவாக இரு மொழித்தேர்ச்சியை (அதாவது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாவுற சிங்களம் அல்லது தமிழ் மொழித்தேர்ச்சி) எய்தும் போது அரசாங்க உத்தியோகத்தர்களினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராயந்து மொழிக் கல்வியில் ஈடுபட்டுள்ள அனுபவமிக்க கல்விமான்கள் குழுவுடனும் இயைபுள்ள ஏனைய அதிகாரபீடங்களுடனும் உசாவுதலைச் செய்து நீண்டகால, குறுகிய கால மற்றும் நடுத்தவணைகால சிபாரிசுகள் பிரேரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சிபாரிசுகள் சில இங்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது : (I) கோட்பாட்டு ரீதியில் இருந்த பாட சிபாரிசுகள் அரசாங்க உத்தியோகத்தர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நடைமுறை ரீதியில் தற்போது மீளத் தயாரிக்கப்பட்டுள்ளமை ; (II) புதிய பாடநெறிகளுக்கான சுயகற்கை பொதிகளைத் தயாரித்தல் ; (III) சில உயர்தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழித்தேர்ச்சியை மதிப்பிடும் போது மாற்றுத் தகைமையொன்றாகக் கருதப்படும் க.பொ.த(சா/த) பரீட்சையில் தாய்மொழிக்கு (பிரதான பாடமாக) சாதாரண சித்தியொன்றைப் பெற்றிருப்பதற்குப் பதிலாக க.பொ.த(சா/த) பரீட்சையில் இரண்டாம் மொழியில் சித்தியடைந்திருப்பது இத்தகைய தகைமையொன்றாகக் கருதுவதற்கு தற்போது பிரேரிக்கப்பட்டுள்ளமை ; (IV) அரசாங்க சேவைக்கு புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்யும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் சேவை ஆரம்ப பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் இரண்டாம் மொழி தொடர்பில் ஆரம்ப அறிவை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை ; (V) அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி தொடர்பில் குறித்த மொழியில் கடமையாற்றுவதற்கு போதுமான மொழி அறிவை பெறக்கூடிய விதத்தில் இடமாற்றக் கொள்கையொன்று வகுத்தமைக்கப்படவுள்ளமை ; (VI) அந்தந்த சேவைப் பிரமாணக் குறிப்புகளில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு இரண்டாம் மொழித்தேர்ச்சி தேவையை கொண்டுள்ள உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சியினை எய்தும் தேவையிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளமை ; (VII) மருத்துவ, பொறியியல், கால்நடை போன்ற தொழில்களுக்கும் அதேபோன்று சில தொழினுட்பத் தரங்களுக்கும் புதிதாக சேவையில் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு தேசிய மொழித் தேர்ச்சி பற்றிய தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அவர்களுடைய சேவையை ஆரம்ப பயிற்சி நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் 150 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சி பாடநெறியொன்றை கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை ; (VIII) மொழிபெயர்ப்பு சேவையை மீளமைத்தல் ; (IX) சிங்களம் / தமிழ் அடிப்படை மொழி அறிவைப் பெறுவதற்கு பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட மொழிப் பயிற்சி பாடநெறியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளமை ; (X) பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்காக நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழி பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படவுள்ளமை ; (XI) அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள், அரசாங்க வங்கிககள் மற்றும் முற்றுமுழுதாக அரசுடைமையாக்கப்பட்ட கம்பனிக்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்டுபவர்களுக்கு அரசகருமமொழி தேர்ச்சிபெறும் தேவையை ஏற்புடைத்தாக்கவுள்ளமை ( சேவையில் இணைந்த திகதியிலிருந்து ஐந்து (05) வருடக காலப்பகுதிக்குள் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்தல் வேண்டும்) ; (XII) 2019 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்க சேவைக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் போது சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்படவுள்ளமை .