• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலைத்தீவு குடியரசின் EON RESORTS GROUP Pvt Ltd கம்பனி மூலம் 170 மில்லியன் ஐ.அ.டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் சொகுசு ஹோட்டல் ஒன்றுடனான கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை உருவாக்கு வதற்கான பிரேரிப்பு
EON RESORTS GROUP Pvt Ltd மாலைதீவில் அமைந்துள்ள உலகம் முழுவதும் பிரபல்யம் வாய்ந்த சொகுசு ஹோட்டல் உரிமையாளர் ஒருவராகவும் அபிவிருத்தியாளர் ஒருவராகவும் திகழ்கின்றது. கடந்த தசாப்தகாலப்பகுதியில் இந்தக் கம்பனியினால் மாலைதீவில் உலக பிரசித்தப்பெற்ற அதிசொகுசு ஹோட்டல்கள் சிலவற்றை அபிவிருத்தி செய்துள்ளது. கொழும்பு நகரத்தில் நடைமுறைப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு பின்வரும் பிரதான பிரிவுகளும் உள்ளடங்கும்: * களியாட்ட மற்றும் வியாபார உல்லாசப் பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதற்கு 45 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றும் ; * 300 சொகுசு ஹோட்டல் அறைகளும் ; * 100 சொகுசு வீடமைப்பு அலகுகளும்; * 2000 விருந்தாளிகளுக்கு இடவசதிகளை வழங்கக்கூடிய மாநாட்டு மண்டபமும். இந்த கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளுக்காக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினாலும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.