• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
க.பொ.த(சா/த) பரீட்சை - 2012 பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு
கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2012 க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய, மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் எய்தப்பட்டுள்ள பெறுபேறுகள் தொடர்பிலான தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் பெறுபேறுகளின் பகுப்பாய்வுக்கு அமைவாக, * 2012 க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 64.74 சதவீதமானோர் க.பொ.த (உ/த) இல் கல்வி கற்பதற்கு தகைமைகளைப் பெற்றுள்ளதுடன், இது 2005 - 2012 வரையிலான காலப்பகுதிக்குள் 15.04 சதவீத அதிகரிப்பாகும்; * 2005 ஆம் ஆண்டு 8.02 சதவீதமாக இருந்த சகல பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் விகிதாசாரம் 2012 ஆம் ஆண்டில் 4.13 சதவீதமாக குறைந்துள்ளது; * 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கிழக்கு, வடக்கு, ஊவா மாகாணங்களில் உயர் தரத்தில் கல்வி கற்பதற்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களின் விகிதாசாரம் முறையே 5.8 சதவீதமாகவும், 5.73 சதவீதமாகவும் 5.81 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.