• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புளத்சிங்கள பிரதேச செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு 54 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், இதன் மொத்த சனத்தொகை 69,902 ஆகும். பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களுக்கும் பிரசே செயலகத்தைச் சேர்ந்த பணியாட்டொகுதியினருக்கும் அதிக வசதிகளை வழங்குவதற்கு இயலச் செய்யும் வகையில் 2014-2016 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்புக்குள் வழங்குவதற்குள்ள நிதியங்களை பயன்படுத்தி புளத்சிங்கள பிரதேச செயலகத்திற்கு 79.9 மில்லியன் ரூபா மொத்த செலவினத்தின் மீது மூன்று மாடிக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு, பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.