• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற் பேட்டைகளை பலப்படுத்துத்தல்
கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் முகாமை செய்கின்ற பதினெட்டு (18) கைத்தொழிற்பேட்டைகளை தாபித்தல், நெறிப்படுத்துதல், சேவை வழங்குதல் மூலம் நாட்டில் பலபாகங்களிலுமுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு / கைத்தொழில்களுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் பொருட்டு, 2011‑06‑11 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் கையாளப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற் பேட்டைகளுக்கான காணித் துண்டுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட குத்தகைக்கூலி கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகளுக்கு அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.