• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
காப்புறுதித் தொழிலை ஒழுங்குறுத்தும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை காப்புறுதி சபையின் கீழ் 2011 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் காப்புறுதித் தொழிலில் ஈடுபடுவதற்காக பதிவு செய்து கொண்டுள்ள சகல காப்புறுதிக் கம்பனிகளும் திருத்தச் சட்டம் செயல்வலுவுக்கு வரும் திகதியிலிருந்து ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் உத்தரவுச்சீட்டு பெற்ற பங்குப் பரிமாற்றமொன்றில் நிரற்படுத்தப்படுதல் வேண்டும். 2011‑02‑11 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனிகள் மூன்று (03) வருட காலப் பகுதிக்குள் இவ்வாறு பங்குப் பரிமாற்றமொன்றில் பதிவு செய்யப்படுதல் வேண்டும். 2011‑02‑11 ஆம் திகதியன்றுக்கு முன்னர் இலங்கை காப்புறுதிச் சபைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனிகள் உத்தரவுச்சீட்டு பெற்ற பங்குப் பரிமாற்றமொன்றில் பதிவு செய்யும் தேவையிலிருந்து உரிய நியதிகளுக்கு உட்பட்டு, விடுவிக்கும் பொருட்டு தேவையான திருத்த சட்டங்களை ஆக்குமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.