• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு கம்புறுபிட்டியாவிலுள்ள காணி யொன்றை குறித்தொதுக்குதல்
1991 ஆம் ஆண்டு கம்உதாவ நிகழ்ச்சித்திட்டத்தின் காரணத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட கம்புறுபிட்டிய கம்உதாவ கண்காட்சித்திடலில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை இடம்பெயர்ந்த வதிவிடதாரர்களுக்குத் தனிப்பட்ட அறுதியுறுதிகளை வழங்கும் நோக்கத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு குறித்தொதுக்கும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.