• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்கான காணி சுவீகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவொன்றுக்கான பிரேரிப்பு
மேற்போந்த கருத்திட்டத்தின் தொடக்க வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதை விசேடமாகக் கொண்டு இந்தப் பிரதேசங்களின் சுற்றாடல் முறைமையும் அபிவிருத்தி அடையும். இந்தக் கருத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் , I ஆம் கட்டத்தின் கீழ் நுகேகொட – ரத்தனபிட்டிய கால்வாய் பாதையை அபிவிருத்தி செய்வதற்கும், பொரலஸ்கமுவ வடக்கு மற்றும் தெற்கு உபவலயங்களில் அமைந்துள்ள கால்வாய் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கும் சேறுவாருவதன் மூலம் கால்வாய் மற்றும் வேரஸ் கங்கையை அபிவிருத்தி செய்வதற்கும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கும் பொல்கொட மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் அமைந்துள்ள வடிகாலமைப்பு முறைமைகளை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்ட செலவினம் 13,000 மில்லியன் ரூபாவாகும் என்பதுடன், இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இடம்பெயரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இக் கருத்திட்டத்தின் மூலம் பாதிப்புக்குள்ளாகின்றவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.