• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தைக்கும் டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தைக்கும் எல்லையாக அமைந்துள்ள காணியை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றுக்காக M/s Lake Leisure Holdings (Pvt) Ltd கம்பனிக்குக் குத்தகைக்களித்தல்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பேரேஆறு சார்ந்த பிரதேசத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டத்திற்கு ஏற்புடைத்தானவாறு கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் மீளாய்வுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள காணியை குத்தகைக்களிப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.